Thursday, October 27, 2016

                                       நெல்லை கோட்ட செய்திகள் 
1.டிசம்பர்  15 புதுடெல்லியில் நடைபெறும் பாராளுமன்ற பேரணிக்கு செல்ல விரும்பும் தோழர்கள் நமது கோட்ட உதவி செயலர் 
தோழர் C .வண்ணமுத்து அவர்களை தொடர்பு கொள்ளவும் .(ரயில் கட்டணம் 860+ 860) 
2.அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு டிசம்பர்  28மற்றும் 29.தேதிகளில் திண்டிவனத்தில் நடைபெறுகிறது .வரவிரும்பும் தோழர்கள் கோட்டசெயலர் தோழர் SK .பாட்சா அவர்களை அனுகவும் .இதற்கான நன்கொடை புத்தகங்கள் மாநில சங்கத்தின் மூலம் வந்துள்ளன .தேவைப்படுவோர் பெற்று கொள்ளவும் .ஏற்கனேவே நன்கொடை புத்தகங்களை வாங்கியவர்கள் டிசம்பர்  7ம் தேதிக்குள் பிரித்த தொகையுடன் திருப்பி செலுத்த கேட்டு கொள்கிறோம் .
3.பஞ்சபடி DA from July 2016--இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
--------------------------------------------------------------------------------------------------------
                                              

 
இலாகாவின் உயர்வு எங்களின் வியர்வை அல்லவா !
இலக்கை எட்டியது ஊழியர்களா ? அதிகாரிகளா ?
விடுமுறை நாட்களையும் கபளீகரம் செய்யும் அளவிற்கு அமேசான் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ? என்ன ? 

ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் E-COM/E-TAIL/SP பட்டுவாடா பணிக்கு ஊழியர்களை பணித்து இடப்பட்ட  அஞ்சல் இலாக்காவின்  தொழிலாளர் விரோத , மனித உரிமை மீறலான உத்திரவை ரத்து செய்திடக் கோரி  நடைபெற்ற முதற்கட்டப் போராட்டமான  கண்டன ஆர்ப்பாட்டம் 26.10.2016 அன்று பாளை தலைமைஅஞ்சலகம் முன்பு சிறப்பாக நடைபெற்றது .அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர்  தோழர் சீனிவாச சொக்கலிங்கம் தலைமை வகித்து  நடத்திக்கொடுத்தார்கள் .
                                          தோழர் சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P 4
                                       தோழர் பாட்சா  கோட்டசெயலர்  P 4
                           தோழர்  C .வண்ணமுத்து  கோட்ட உதவி செயலர் 

                             தோழர் அழகுமுத்து  கோட்ட உதவி செயலர்   

               தோழர் ராம்குமார்  GDS சங்க பொறுப்பாளர்    (Admin whatsapp )
                                                   தோழர் ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர்  P 3                                    தோழர் புஷ்பாகரன்  கோட்ட உதவி செயலர் P4  

Wednesday, October 26, 2016

                                    நெல்லை கோட்ட செய்திகள் 
1.RULE 38 ன் கீழ் இடமாற்றம் பெற்று நெல்லைக்கு வரும் முதல்பட்டியலில் உள்ள 9 தோழர்களுக்கும் இடமாறுதல் கமிட்டி 25.10.2016 மாலை நடைபெற்றது .நெல்லை மற்றும் நாகர்கோயில் SSP கள் மற்றும் ASP (HOS) கொண்ட இந்த இடமாறுதல்களை பரீசீலித்து முடிவெடுத்துள்ளது .இன்று  அதற்கான உத்தரவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
  2.தபால்காரர் /MTS பதவிகளில் Officiating பார்க்கும்  GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் ஊதியம் வழங்க நேற்றும்  விவாதிக்கப்பட்டது .மதுரை RMS மற்றும் .மத்திய மண்டலங்களில் புதிய  ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றாலும் தென் மண்டலத்தில் ஏனோ இது நடைமுறைப்படுத்த இயலவில்லை .மாநிலசங்கங்கள் இந்த பிரச்சினைகளை குறித்து விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
3. GDS ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க நமது கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்புதல்  கொடுத்துள்ளார்கள் .ஆகவே அடையாளஅட்டை வேண்டுவோர் தோழர் I. ஞானபாலாசிங் (9003479901 ) அவர்களை தொடர்பு கொள்ளவும் .
                  வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை