...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 4, 2013

nlc

NLC  தொழிலாளர்களுக்கு  வீர வாழ்த்துக்கள் 




நெய்வேலி என் எல் சி தொழிலாளர்கள் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெய்வேலி என் எல் சி நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனந்த்தின் 5 சதவிகிதம் பங்குகளை, மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது. இதற்கு என் எல் சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த நான்கு நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். கடைசியாக இன்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருப்பதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க கிட்டத்தட்ட 2 ஆயிரம் போலீசார் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தொழிலாளர் நல சங்கங்களும் ஒன்றிணைந்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால் முற்றிலுமாக என் எல் சியில் வேலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே என் எல் சி நிறுவனம் சார்பில், ஒரு வேண்டுகோள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொது மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு விடும். என் எல் சி நிறுவனத்துக்கும் நஷ்டம் மற்றும் களங்கமும் ஏற்பட்டுவிடும். பங்கு விற்பனை தொடர்பாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மத்திய நிதி அமைச்சரும் பங்கு விற்பனை தொடர்பாக சுமுக முடிவு எட்டப்படும் என்று கூறியுள்ளார். எனவே, ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டாம்' எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் நிறுவன அறிக்கையை தொழிலாளர்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.

0 comments:

Post a Comment