...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 7, 2015

                         தொழிலாளர் நல சட்டங்கள் --சட்ட திருத்த பின்னணி 

பன்னாட்டு முதலாளிகளுக்கு பாதுகாவலனாக செயல்படும் உலக வங்கி 2008 இம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் தொழிலாளர் நல சட்டங்கள் தொழில் வளர்ச்சிக்கு தடையாகவும் ,சிக்கல்  நிறைந்ததாகவும் உள்ளன .இதை கருத்தில்கொண்டு இச் சட்டங்களை திருத்த இந்திய அரசு முன் வர வேண்டும் என்று அறிவு றுத்தி உள்ளது   .புதிய பொருளாதார கொள்கையினால் தனியார் மயத்துக்கு சகல சலுகைகளையும் தாரை வார்த்து கொடுக்க மத்திய /மாநில அரசுகள் இதுவரை செய்ய முன்வராத தொழிலாளர் நல சட்ட திருத்த சட்டத்தை திட்ட மிட்டு அரங்கேற்ற துணிந்து விட்டது இன்றைய மத்திய அரசு  .இதற்கு முன்னோட்டம் பார்ப்பது போல் ராஜஸ்தான் மாநில பிஜேபி அரசு 1947 இம் ஆண்டின் தொழில் தகராறு சட்டம் ,1948 ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம் .1970 இம் ஆண்டின் ஒப்பந்த தொழிலாளர் சட்டம்  ஆகியவற்றில் திருத்தங்களை செய்துள்ளது .இதனால் நிறுவனங்களை மூடவும் ,ஊழியர்களை நீக்கவும்நிறுத்தவும் தொழிலாளர் நல ஆணையம் மத்திய அரசின் அனுமதி பெற தேவையில்லை .மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் அமைய மொத்த தொழிலாளர்களில் 15 சதவிகிதம் இருந்தால் போதும் என்ற நிலை மாறி 30 சதமாக  , உ யர்தியுள்ளது.

                         நம்முடைய பிரதமர்  தூய்மை இந்தியா ,மேக் இன் இந்தியா ,உழைப்பே வெல்லும்  என்று போதிக்கிறார் . ,உழைப்பே வெல்லும் என்று சொல்லிவிட்டு உழைக்கும் மக்களுக்கு எதிராக தொழிலாளர் நல சட்டங்களை முடக்குகிறார் .இச் செயல்பாட்டை முறியடிக்க ஒன்று பட்டு போராடுவது ஒன்றே தீர்வாகும் -- (நன்றி- R 4 அறிக்கையில் இருந்து )

0 comments:

Post a Comment