...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 8, 2015

ARE THE POSTAL CLERKS 'A TESTING RAT' FOR INFOSYS ?

INFOSYS  நிறுவனத்தின் சோதனை எலிகளா 
தமிழகத்து அஞ்சல் எழுத்தர் ?

நாம் ஒரு TRANSACTION  செய்யவில்லை என்றால்கூட   RULE  16 கொடுக்கத் துடிக்கும் அதிகாரிகள் ,  நாடுமுழுதும் உள்ள 1539 MIGRATE  செய்யப் பட்ட அலுவலகங்கள்  இரண்டு நாட்களாக ஸ்தம்பித்தபோது  என்ன செய்தார்கள் ?   

கடந்த  இரண்டு நாட்களாக நாடு முழுவதும்  CBS  அலுவலகங்களில்  EOD கொடுக்க முடியாமல்  மறுநாளைக்கான BOD  செய்ய முடியாமல் , COUNTER  இல் வந்த CUSTOMER  களிடம் பதில் சொல்ல முடியாமல் ,  வேறு வழியில்லாமல் வாங்கிய பணத்தையும்  VOUCHER  களையும் வரவு வைக்க முடியாமல் இரவு பகலாக தூக்கம் தொலைத்து ,  பொது மக்களிடம் 'அடி உதை'  வாங்காத குறையாய் , வசவுகளை மட்டுமே வாங்கி  தன்  பணியை இன்றுதான் முடித்தான்  நம் தோழன்  . 

இதில் தமிழகத்து  தோழனுக்கு  சிறப்பான இடம் உண்டு . 
ஏன் தெரியுமா ? நாம் தானே  சோதனை எலிகள் !  
யாருக்கு ? INFOSYS  நிறுவனத்திற்கு  !. 
ஏன் சோதனை எலிகள் ஆனோம் ? 

'எத்தனை அடித்தாலும் வாங்குகிற வடிவேலு 'வை காரணம் கேட்க
'அதில ஒருத்தன்  என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா  ' என்று கூறும்  திரைப்பட வசனம் போல, நம்மை நல்லா வேலை பார்க்கிறான் ' னு  நம்முடைய  உயர் அதிகாரிகள்  சொல்லி விட்டார்கள்  அல்லவா ?

எப்படி ?  

இந்தியாவிலேயே CBS MIGRATION  முதன் முதலில் துவங்கியதும்  தமிழகத்தில்தான் .. மிக அதிக அலுவலகங்கள் MIGRATE செய்யப் பட்டதும் தமிழகத்தில் தான் ... அதுவும் அதிவேக எண்ணிக்கையில்............

அதாவது 05.01.2015 இலாக்கா புள்ளி விபரப்படி MIGRATE  செய்யப்பட  அலுவலகங்கள் :-

தமிழகத்தில் H.O.  - 94        S.O.s -  289    மொத்தம் - 383 அலுவலகங்கள் 
பீகார்                  H.O. -  1          S.O.  -   NIL    H.O. -  சத்தீஸ்கர்  - 1  S.O. - NIL 
குஜராத்             H.O. -  4          S.O.  -   NIL   ஹரியானா - H.O. -  4          S.O.  - NIL
ஹிமாச்சல்     H.O. -  3          S.O.  -   NIL   ஜார்கண்ட்  -  H.O. -  8          S.O.  - NIL 
கேரளா              H.O. - 13          S.O.  -   NIL  மத்திய பிரதேஷ் H.O. - 14   S.O. - NIL 

இப்படிப் போகிறது பட்டியல் .... உங்களுக்குத் தெரியாது .. ஆனால் நம்முடைய  அதிகாரிகளுக்கு  நன்றாகவே தெரியும்  !

இப்படி வேகமாக  செய்து முடிக்க நம்முடைய அதிகாரிகள் காட்டும் அதீத ஆர்வம்............... , அது சரியாக இருக்குமானால் நமக்கும் நிச்சயம் சரியாக ஏற்றுக் கொள்ள முடியும். அதில் தவறில்லை . ஆனால் 1100 கோடி 'ஏப்பம்' விட்ட  INFOSYS  COMPANY  யை........  வாங்கிய  பணத்திற்கு  வேலை செய்ய வைக்க நம்முடைய அதிகாரிகளால் முடியவில்லை  அல்லவா ? 

MOCK  MIGRATION செய்து பார்த்துதானே  DATA CENTRE  இல் DATA MIGRATE செய்கிறார்கள் ? 

அப்படியானால்   ஒவ்வொரு அலுவலகத்திற்கும் எத்தனை கணக்குகள் உள்ளது என்ற எண்ணிக்கை அவர்களுக்கு தெரியாதா ?  

எத்தனை அலுவலகங்கள்  ' இடையில் வரும்  ஒரு SUNDAY  அல்லது  HOLIDAY  யில்  MIGRATE  செய்ய முடியும் என்று தெரியாதா ?

அதற்கு ஏற்றார்போல அலுவலக எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொள்ள தெரியவே தெரியாதா ?

 03.01.2015 ஒரே  நாளில் 103 அலுவலகங்கள் MIGRATE செய்ய வேண்டிய அவசியம் என்ன ? 

அந்த DATA  06.1.2015 வரை  MIGRATE  செய்து முடிக்க முடியவில்லையே  ஏன் ? 

அதுவரை  பொதுமக்களிடம்  உதை வாங்கியது.... வாங்குவது  யார் ?அப்பாவி அஞ்சல் ஊழியன் தானே  ? 

1100 கோடி வாங்கிய INFOSYS காரன்  அல்லவே ?

06.01.2015 BOD  06.01.2015 மாலை 06.45 க்கு  துவக்கலாம் என்று  வெட்கமில்லாமல் MAIL  கொடுப்பதை  நம் அதிகாரிகள் எவ்வாறு ஏற்கிறார்கள் ? 

நாம் ஒரு TRANSACTION  செய்யவில்லை என்றால்கூட   RULE  16 கொடுக்கத் துடிக்கும் அதிகாரிகள் ,  நாடுமுழுதும் உள்ள 1539 MIGRATE  செய்யப் பட்ட அலுவலகங்கள்  இரண்டு நாட்களாக ஸ்தம்பித்தபோது  என்ன செய்தார்கள் ?   

பல லட்சம் மக்களின்  சேவை பாதிக்கப்பட்டதற்கு என்ன செய்தார்கள் ?

CUSTOMER  இழப்புக்கு என்ன செய்யப் போகிறார்கள் ? ஓ ! குட்டி அதிகாரிகள்தான்  நம் ஊழியனின் 'பெண்டாட்டி' பேரிலும் 'பிள்ளை' பேரிலும்  பல நூறு கணக்குகள் துவக்கிடச் சொல்லுகிறார்களே ? பார்த்துக்கொள்ளலாம் ... என்ற நினைப்போ  ? 

எத்தனை மனித உழைப்பு நாட்கள் வீணடிக்கப்பட்டன ? இந்த நஷ்டத்தை எவர் தலையில் கட்டுவது ? 

இத்தனைக்கு  இது முதல் தடவை அல்லவே ?  ஒவ்வொரு திங்கள் கிழமையும்  CBS  அலுவலகங்களில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அல்லவா நம் அப்பாவி ஊழியன் உள்ளே நுழைய வேண்டி உள்ளது ? .  

இதற்கெல்லாம் ஏன்  INFOSYS  COMPANY  மீது 
சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை ? .  

ஏன் நஷ்ட ஈடு கோரவில்லை ? 

ஏன்  CONTRACT  ஐ ரத்து செய்யவில்லை ? 

ஏன் BLACK  LIST  செய்யவில்லை ? 

ஓ ! அதெல்லாம்  மேலிடத்து சமாசாரமோ ? இருக்கட்டும் ... 
அப்படியே இருக்கட்டும் ... 

அது எங்கள் வேலையில்லை என்றாலும் கூட ... என் அப்பாவி ஊழியனை ஏன் கொடுமைப் படுத்துகிறீர்கள் ? 

ஏன் இந்த 'பேய்' வேகம் ?  ' ஓட்டைச் சட்டி' என்று இத்தனை மாதங்களுக்குப் பிறகு புரிந்த பின்னுமா   MIGRATION இல் வேகம் ? 

இத்தனை  பிரச்சினை இருக்கும் போது எந்த மாநிலங்களிலும் இல்லாமல்  இங்குமட்டும் ,  ஏன் இந்த வேகம்?   சற்று நிறுத்திதான் செய்யலாமே ? 

இத்தனைக்கும் வங்கித்துறையில் இன்று பல நிறுவனங்கள் 'FINACLE ' சரியில்லை என்று கழற்றி விடுவதாக  பத்திரிகை செய்தி தினம் தோறும் வருகிறதே ?  பார்க்கவில்லையா ?

"(UBI), which markets itself as 'the bank that begins with U', has taken a U-turn a day after it blamed deficiencies in Infosys' software"  ...BUSINESS STANDARD - 07.01.2015.

எது என்ன ஆனால் என்ன ? ... அஞ்சல் ஊழியன்... தமிழக அஞ்சல் ஊழியன் ...  பன்னாட்டு நிறுவனங்களின்  சோதனை எலிகளாக்கப்பட்டு வருகின்றான் ...  இது சரியா ?
                                      J .இராமமூர்த்தி               மாநில செயலர் 



0 comments:

Post a Comment