...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, July 10, 2016

பக்கம் பக்கமாக அறிக்கை விடும் தலைவர்களே ?
உண்மையை சொல்லுங்கள் EMPOWERED கமிட்டி பரிந்துரைத்தது என்ன ?நிராகரித்தது என்ன ? என்ன ?GDS குறித்து விவாதித்தீர்களா ? 
ஓய்வு பெற்றவர்களே இதோ சாய்வு நாற்காலியில் அமருங்கள்  ?
  எங்களுக்கு வழிவிடுங்கள் !வாழவிடுங்கள் !இயக்கத்திற்கு விடைகொடுங்கள் !
       ஊதியக்குழு கொடுத்த பரிந்துரையை அமுல்படுதுவதற்கு முன்பாக  அரசே முன் வந்து Empowered கமிட்டி என்று யாரும் கேட்காத கமிட்டேயை அமைத்தது .அரசுடன் ஊழியர்தரப்பு பிரதிநிதிகள் அல்ல ஓய்வு பெற்ற பிரதிநிதிகள் நடத்தியதாக சொல்லப்படும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் நான்குமாதத்திற்குள் உயர்மட்ட கமிட்டி புதுமுடிவு எடுக்கும் என்று சொல்கிறார்களே !
  இது NDA அரசின் மீது ஏற்பட்ட புதிய நம்பிக்கையா ?
 இல்லை ஊழியர்களின் போராட்டத்தின்  மேல் எழுந்த புதிய சந்தேகமா ? 
1.Empowered கமிட்டி என்னதான் பரிந்துரை செய்தது அல்லது எதையெல்லாம் நிராகரித்தது என்று எந்த தலைவர்களும் இதுவரை வாய்திறக்காதது ஏன் ?
2.அப்படி என்றால் 30 ம் தேதி பேச்சு வார்த்தை எந்த நிலையி ல்  முறிந்தது ?
3.6ம் தேதி பேச்சுவார்த்தை  எந்த அடிப்படையில்  அரசின் மேல் நம்பிக்கை பிறந்தது  ?
4.6 ம் தேதி நிச்சயம் போராட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என்ற ரகசிய செய்தியை கசியவிட்ட தலைமை எது ? 
5.எழுத்து பூர்வமான ஒப்பந்தம் கிடையாது .எல்லாம் பத்திரிக்கையில் பாருங்கள் என்றால் இரத்தம் கொதித்திருக்க வேண்டாமா ?அங்கேயே இன்குலாப் முழங்கியிருக்க வேண்டாமா ?
 போராட்டம் எனும் பேருந்தை மட்டும் தவறவிடவில்லை -எதிர்கால வழி தடத்தையை இழந்து நிற்கி றீர்கள் 
   பலி சொல்ல பழைய தரப்பில் ஆளில்லை இல்லையென்றால் அவரால் தான் எல்லாம் கேட்டது என்று  கோரஸாக பல்லவி  தொடங்கியிருக்கும் இல்லையென்றால்  பேச்சுவார்த்தைக்கு செல்லும் முன்பே மந்திரி  எங்கள் காலில் விழுந்தார் என்ற பழைய கதையும் சொல்ல வழியில்லை  
   இன்னும் கொஞ்சநாள் பொறுங்கள் அந்தத்துறை சங்கம் சரியில்லை இந்த சங்கம் சரியில்லை எந்தசங்கமும் சரியில்லை நாம் மட்டும் தான் கடைசிவரை நிற்க வேண்டியதாகிவிட்டது என்று கூசாமல் செய்திகள் வரத்தொடங்கும் சரி விடுங்கள் (இறுதி வெற்றி நமதே )
நமது ஊழியர்கள் புதிய சம்பளம் எப்பொழுது வரும் என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு பதில் சொல்வோம் 
1.ஜூலை மாதம் புதுசம்பளம் 
2. அலவன்கள் பழைய முறை  
3.அரியர்ஸ் இப்போது இல்லை 
                             09.7.2016 நடைபெற்ற கூட்டு பொதுக்குழு 
                         தலைமை தோழர் T .அழகுமுத்து அவர்கள் 

                                                 தோழர் S .கோமதிநாயகம் அவர்கள் 
                                                 தோழர் SKJ அவர்களின் விளக்கவுரை 

0 comments:

Post a Comment