...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 13, 2016

மீண்டும் விவாதப்பொருளாகிறதா செப்டம்பர் 2 பொதுவேலைநிறுத்தம் ?

இது இந்தமாத உழைக்கும் வர்க்கம் பத்திரிக்கையில் தோழர் K .ராகவேந்திரன் பென்ஷன் சங்க பொதுச்செயலர் எழுதிய கட்டுரை 
          நடைபெறாமல் தள்ளிப்போன மத்தியஅரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்க்காக தொழிற்சங்கங்களை குறை சொல்லும் போர்வையில் செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை கொச்சைப்படுத்த துவங்கியுள்ளனர் என்று தனது மனதில் உள்ள ஐயத்தை தெரிவித்துள்ளார் 
ஆம் அவரின் ஐயம் நியாயமானதே !
 5 வருடத்திற்கு ஒருமுறை ஊதியக்குழு ,50 சதம் பஞ்சப்படி இணைப்பு ,இடைக்கால நிவாரணம் ,குறைந்தபட்ச ஊதியம் 26000 ,5 கட்ட பதவி உயர்வுகள் ,ஊதியக்குழுவில் GDS பிரச்சினைகளை சேர்த்தல் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இயக்கங்களை தொடங்கிய மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் ஜூலை 11  காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஒப்பந்தங்கள் ஏதுமின்றி ,நிர்பந்தங்களாலும் ,உடன்பாடு ஏதுமின்றி அரசின் தன்னிச்சையான முடிவுகளுக்கு உடன்பட்டதாலும் மேல் மட்ட அமைப்புகள் மேல் ஊழியர்களுக்கு கோபம் இருப்பது உண்மைதான் .
        நடத்த வேண்டிய போராட்டத்தை நடத்த முடியாமல் ரயில்வே ஊழியர் சங்கங்களை காட்டி விலகி கொண்டது நியாயம் தானா ?என சாதாரண ஊழியர்கள் கேட்பது நியாயம் தானே !
   இதுவரை 1991 முதல் நடைபெற்ற பொதுவேலை நிறுத்தங்களில் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றதுண்டா ?
      ஊதியக்குழு பிரச்சினைகள் மட்டுமல்ல பொதுவாகவே அஞ்சல் பகுதி பிரச்சினைகளை முன்னிறுத்தி அஞ்சல் சம்மேளனங்கள் எத்தனை வேலைநிறுத்த அறிவிப்புகள் கொடுத்தது ?   எத்தனை முறை ஏன் 2006 முதல் அத்தனை முறையும் தள்ளிவைக்கவில்லையா ?
         கேடேர் சீரமைப்பு கெட்ட கனவாக முடிந்தது --பினாகில் .மெக்காமிஸ் பிரச்சினை தொடர்கதையாகி விட்டது ,போஸ்ட் பேங்க் குறித்து ஏதும் சொல்லாதநிலை , போனஸ் உச்சவரம்பை உயர்த்த பாராளுமன்றம் ஒப்புதல் கொடுத்தாலும் நிதியமைச்சகம் தன்னிச்சையாக நிராகரித்த கொடுமை இதையெல்லாம் முன்னெடுத்து செல்ல ஏனோ மத்திய சங்கங்கள் தவறிவிட்டது என்பது உண்மைதான் .
             இந்த மாதம் புது சம்பளம் -நிலுவை தொகை -அதில் பத்து சதம் வருமானவரி பிடித்தம் ,தொழில்வரி ,சேவைவரி என -தொழிலாளி முதுகில் மட்டும் ஏகப்பட்ட வரிகள் (அல்ல)    வலிகள் -வருமானவரி அளவுகோலை உயர்த்த சொல்ல கூட எந்த தலைவர்களும் குரல் கொடுக்காத கொடுமை 
மட்டுமல்ல புதுசம்பளம் வாங்கியகையோடு ஒரு நாள் ஊதியத்தை இழக்க எத்தனை சதவிகித ஊழியர்கள் மனப்  பூர்வமாக தயாராகி இருக்கிறார்கள் சொல்லமுடியுமா ?
            இது தலமட்டத்தில் ஊழியர்களை நேருக்கு நேர் சந்திக்கும் கோட்ட மட்ட /கிளை மட்ட நிர்வாகிகளுக்குத்தான் இந்த சங்கடங்கள் தெரியும் .
        இருந்தாலும் முன்னாள் தலைவர்களின்  ஐயப்பாட்டை  போக்கும் வகையில் அஞ்சல் ஊழியர்கள் செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்பதனை ஒரு தலமட்ட நிர்வாகி என்ற முறையில் தெரிவித்து கொள்கிறேன் .
                                       போராட்ட வாழ்த்துக்களுடன் 
                               SK .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர்  அஞ்சல்மூன்று 

                        
  

1 comment:

  1. Dear Com.Jacob Raj,

    I totally agreed with your gusture and really happy for having raised this.

    Ezhilvanan
    Bhavani

    ReplyDelete