...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 23, 2016

       ஊழியர்களின் தூக்கத்தை கெடுத்த கேடேர் சீரமைப்பு திட்டம் 
கேடேர் சீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் 27.09.2016 அன்று சென்னையில் நமது மாநில சங்கத்தால் கூட்டப்பட்டுள்ளது .கூட்டத்திற்கு முன்பே மாநில நிர்வாகத்தின் நிலை என்ன என்பதை மாநில சங்கம் கோட்ட /கிளை செயலர்களுக்கு விளக்கி கூறினால் தான் 27.09.2016 கூட்டம் ஒரு பயனுள்ளதாக இருக்கும் என்று மாநில செயலரிடம் கூறப்பட்டுள்ளது
அதன் பிறகு நமது ஊழியர்களின் நிலைகளை எடுத்து சொல்லுவோம் .
தற்போது நமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் D.G. Post letter No. 25-04/2012-PE-I dated 27th May, 2016.உத்தரவு அடிப்படையில்LSG ,HSGII ,HSGI என்று  பதவிகள் அடையாளம்காணப்படவேண்டும் .அது ஒரு புறம் இருக்கட்டும் சாதாரண ஊழியர்களின் மனநிலை எப்படியென்றால் 
1.பொருளாதார ரீதியாக பெரிய அளவிற்கு பயன் இல்லாத இந்த பதவி உயர்வினால் தொலை தூர இடமாறுதல்கள் எதற்கு ?
2.பதவி உயர்வை மறுத்தால் அதை ஏற்று கொள்வதில் நிர்வாகத்திற்கு என்ன பாதிப்பு ?
3.அந்தந்த கோட்டங்களுக்குள் இடம் கிடைக்குமா ?என்ற கேள்விகள் 
       தலையை வெட்டிவிட்டு கழுத்துக்கு மாலையா ?
      கண்களை விற்று சித்திரமா ?
1.ஏற்கனேவே  TBOP /BCR பதவி உயர்வின் போது 6 சதம் எழுத்தர் /20 சதம் சூப்பர்வைசர் பதவிகளை இழந்து நிற்கிறோம்  மீண்டும் பதவி உயர்வு என்ற பெயரில் பதவிகளை வெட்ட துடிக்கும் நிர்வாகத்தின் அகோர பசியில் இருந்து தப்பிக்க வேண்டும் .
2.ANNAROAD /சென்னை GPO போன்ற யூனிட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்த பதவிகள்  பதவி உயர்வுக்கு எடுத்துக்கொள்ள படும்?அங்கே இருக்கும் ஊழியர்கள் பதவி உயர்வில் எங்கே செல்வார்கள் ?
3.தலைமை அஞ்சலக APM மற்றும்   SOகளில் உள்ள ASPM பதவிகள் HSGII ஆனால் அங்கே இருக்கும் LSG ஊழியர்கள் நிலை என்ன ? 
4.ஹைதராபாத்தில் கோட்டங்களுக்குள்ளேயே  இடமாறுதல் தமிழகத்தில் சாத்தியமில்லையா ?
              இது குறித்து மேலும் உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன .நிச்சயம் உரிய முறையில் கோட்ட கிளை செயலர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் .மாநில சங்கம் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் .
      தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர் நெல்லை 

0 comments:

Post a Comment