...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 26, 2016

ஞாயிறு /மற்றும் விடுமுறை தினங்களில் பணி செய்ய வற்புறுத்தும் தமிழக அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன                                           ஆர்ப்பாட்டம் 
நவீன நரகாசுரர்களை அடையாளம் காண்போம் 
நாள் 26.10.2016 நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை HO
                     அனைவரும் வாரீர் !வாரீர் !
 
பன்னாட்டு கம்பெனிகளில் கூட அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு  சனி , ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது. கூரியர் நிறுவனங்கள் கூட  அமேசான், நாப்தால் பொருட்களை ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்களில் பட்டுவாடா செய்வதில்லை . அங்கெல்லாம் தொழிலாளர் நலச்  சட்டங்களுக்கு மதிப்பளித்து வார விடுமுறை அளிக்கிறார்கள். 
ஆனால் MODEL EMPLOYER என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்படும் மத்திய அரசுத் துறையான அஞ்சல் துறை அதிகாரிகள், தன்னுடைய இலாகாவில் பணி  புரியும் ஊழியர்களை கொத்தடிமையாக நினைத்து  வார விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் பணிக்கு வரச்சொல்லி  உத்திரவு இடுகிறார்கள். கேட்டால் ரயில்வே துறையில் 24 மணிநேர  பணி  செய்யவில்லையா ? அங்கெல்லாம் ஞாயிறு விடுமுறை விடப்படுகிறதா என்று விபரம் தெரியாமல் சில கீழ்மட்ட அதிகாரிகளும் கேட்கிறார்கள். 
CPMG  அவர்கள் கேரளா அஞ்சல் வட்ட பொறுப்பும் ஏற்றுள்ளதால் அவர் எதிர்வரும் 27.10.2016 மாலைக்கு பிறகுதான் வர இயலும் எனவும், எனவே எதிர்வரும் 28.10.16 அன்று காலை அவரை சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார்கள். மேலும் உடன் இது குறித்து பேசிட PMG ,MM  மற்றும் DPS, HQ ஆகிய இருவரையும்  CPMG  அவர்கள் பணித்துள்ளதால், நாளை 26.10.2016 காலை 10.30 மணிக்கு PJCA  பிரதிநிதிகளை அழைத்துள்ளார்கள். இதில் தீபாவளி பட்டுவாடா நிறுத்தம்  குறித்து முடிவு அறிவிக்கப்படும். இதனிடையே, தென்மண்டல மற்றும் கோவை மண்டல பொறுப்பேற்றுள்ள PMG அவர்கள் தன்னுடைய மண்டலங்களில் தீபாவளி பட்டுவாடாவை  நிறுத்திட உத்திரவை அளித்துள்ளார்கள். அவர்களுக்கு நம் நன்றி .
மேலும் இது குறித்து இன்று இரண்டுமுறை நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலருக்கு நம்முடைய மாநிலச் செயலர்  தகவல்களைத் தெரிவித்து தமிழகத்தில்  PJCA  போராட்ட களம்  அமைந்துள்ளதால் உடன் அஞ்சல் வாரிய உறுப்பினர் ( O ) அவர்களை சந்தித்து முடிவு காண வேண்டியுள்ளார். அவரும் உடன் சந்தித்து பிரச்சினையை பேசுவதாக நம்முடைய மாநிலச் செயலருக்கு உறுதி அளித்துள்ளார்.
எப்படி இருப்பினும், எந்தக் காரணம் கொண்டும் இது போன்ற கொடுமைகளை  நாம் அனுமதிக்க முடியாது. எனவே 26.10.2016 போராட்டத்தின் வீச்சு , ஊழியர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு உணர்வை அஞ்சல் நிர்வாகத்திற்கு உணர்த்திட வேண்டும். அந்த வகையில் போராட்டத்தை அனைத்து பகுதிகளிலும்   சிறக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம். 
நம்முடைய கோரிக்கை எல்லாம் தீபாவளி பண்டிகைக்கானது மட்டுமல்ல. இந்த தொழிலாளர் விரோத உத்திரவு ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டியதே  ஆகும். 
                                                    போராட்ட வாழ்த்துக்களுடன் 
              SK .ஜேக்கப் ராஜ்                                            SK .பாட்சா 
           கோட்ட செயலர் P3                              கோட்ட செயலர் P4  
----------------------------------------------------------------------------------------------------------------------




Click Here for the Advertisement 

Click Here for the Detailed Notification 

Click Here for the Vacancies 

------------------------------------------------------------------------------------------------------------------------


0 comments:

Post a Comment