...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 19, 2017

GDS ஊழியர்களின் ஊதியக்குழு --GDS கமிட்டி அறிக்கை -சில முக்கிய தகவல்கள் 


   அரசின் தயக்கத்தில் காரணம் தெரிந்தது  -நமது 
அவசரத்திலும் உண்மை புரிந்தது


வாங்குகிற சம்பளம் இனி யாருக்கும்  குறையாது -சம்பளத்தில்  கைவைப்பேன் என்று எவரும் நம்மை மிரட்ட முடியாது 
31.12.2015 இல் வாங்கிய TRCA வை 2.57 மடங்கால் பெருக்கி அதை கீழ் உள்ள மாட்ரிஸ் அட்டவணையின் படி உங்கள் புதிய சம்பளம் நிர்ணயிக்கப்படும் .


ஜஸ்டிஸ் தல்வார் அவர்களுக்கு பிறகு நமது துறையிலும் இதுபோன்ற மனிதாபிமானமிக்க அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள் என்ற சிறப்பை பெற்ற திரு .கமலேஷ் சந்திரா அவர்களுக்கும் --அவர்தம் குழுவினருக்கும் ஒவ்வொரு GDS ஊழியரும் நன்றி தெரிவிக்க வேண்டும் --


1.TRCA என்பதற்கு மாற்றாக NEW WAGE PAYMENT சிஸ்டம் அறிமுகம் 
2.மூன்று ஊதிய நிலைகள் 
          10000---24470 (OTHER THAN BPML  L  EVEL 1)
          12000--29380 (OTHER THAN BPML L EVEL2 &   LEVEL  1)
          14500--35480 (BPM LEVEL 2)
3.குறைந்தபட்ச வேலைநேரம் 4மணிநேரம் 
4.புதிய BO வேலைநேரம் 4 மணி &5 மணிநேரம் . 
5.4 மணிநேர வேலை லெவல் 1அலுவலகம் ஆகவும்  5மணிநேர வேலை லெவல் 2 அலுவலகம் ஆகும்
6.புள்ளி அடிப்படையில் வேலை பளு என்பது  ஒழிக்கபடுகிறது .
7.வருவாய் அடிப்படையில் BO கள்   AB &C என பிரிக்கப்படும் .
8.6வகையான GDS இனி இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றனர் .
 (a )Branch Post Master  (b )Multi Tasking Category 
9.கிளை அஞ்சலக இதர  GDS ஊழியர்கள் Asst BPM என்றும் துணை அஞ்சலகங்களில் பணிபுரியும் GDS ஊழியர்கள் DAK SEVAK (DS )என்றும் அழைக்கப்படுவார்கள் .
10.குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 10000 அதிகபட்ச ஊதியம் ரூபாய் 35480
11.ஆண்டு ஊதிய உயர்வு (INCREMENT ) 3சதம் 
12.குழந்தைகள் படிப்பிற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 6000 (இது புதிதாக அமுல்படுத்தப்படுகிறது )
13.மூன்று பதவி உயர்வுகள் முறையே 12 --24--36 ஆண்டுகளில் வழங்கப்படும் .
14.GRATUITY அதிகபட்சமாக ரூபாய் 500000 (ஐந்து லட்சம் )
15.குரூப் இன்சூரன்ஸ் 5லட்சமாக உயருகிறது 
16.மகப்பேறு விடுப்பு --26 வாரங்கள் (முழுவதும் சம்பளமாக கிடைக்கும் )
17.PATENITY லீவு GDS தந்தையருக்கு 7நாட்கள் 
18.EMERGENCY லீவு 5 நாட்கள் 
19.ஜனவரி --ஜூலை தலா 15நாட்கள் விடுப்பு வழங்கப்படும் .அதை 180 நாட்கள் வரை சேமிக்கலாம் .


20.1வருட சேவை முடித்திருந்தாலே தபால் காரர் தேர்வு எழுதலாம் .
21.பணிபுரியும் இடத்தில் மாற்று இடம் என்னும் விதியும் தளர்த்தப்படுகிறது .
22.இடமாறுதல் ஆண் ஊழியர்களுக்கு 3முறையும் -பெண் ஊழியர்களுக்கு எத்தனை முறையாகவும் இருக்கும் .இடமாறுதலை கோட்ட அதிகாரியே கவனிப்பார் .
23.பணியில் இருந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் தாமதமின்றி வேலை வழங்கப்படும் .


Severance Amount : @ Rs.4,000 from 01-01-2016 for every completed year of service subject to maximum of Rs.1,50,000-.

Service Discharge Benefit Scheme (SDBS):

GDS contribution should be revised as minimum of 3% and maximum of 10%  of the basic wage per month.

Department contribution should be fixed as 3% of the basic wage.




         நன்றி -தோழமையுடன்  SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment