...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 16, 2017

                 இன்னும் எத்தனை நாளைக்கு புதிய சம்பளம் --பழைய அலவன்சஸ் 
  இது மத்தியஅரசின் பலமா ? ஊழியர் சங்கங்களின் பலவீனமா ?
  அலவன்சஸ் ,மற்றும் இதர கோரிக்கைகள் ரயில்வே ,பாதுகாப்புத்துறை என்ன நினைக்கிறது ? இவை நீங்கலாக மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் மட்டும் வேலை நிறுத்தம் என்ற முடிவில் உறுதியாக இருப்பதேன் ? 5 மாநில சட்டசபை தேர்தல் மார்ச் 15 இல் தான் முடிவடைகிறது .அடுத்தநாளே அதாவது மார்ச் 16 இல் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தை சார்ந்த துறை ஊழியர்கள் மட்டும் வேலைநிறுத்தம் செய்வது எந்தவகையில் நமது கோரிக்கைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை .
கடந்த ஜூலை 2016 இல் மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எங்கே போனது ? உயர் பணமதிப்பு நீக்கம் விவகாரத்தில் எல்லாம் மறைந்து போனது .புதிய பென்ஷன் திட்டம் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி தன் கொள்கை முடிவை தெரிவித்து விட்டது அது தெளிவில்லாத ஒரு நிலையில் உள்ளது புதிய பென்ஷன் திட்டத்தை நீக்குவது தனது வரம்பில் இல்லை என்று கைவிரித்து விட்டது .ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்பின்படி உயர்த்தப்படும்  அலவன்சஸ் 01.01.2016 முதல் கிடைப்பது குதிரை கொம்பாகிவிட்டது .குறைந்தபட்ச ஊதியம் -பிட்மேன் பார்முலா அதிலும் எந்தவிதமான பேச்சும் இல்லை --மூச்சும் இல்லை -இது குறித்து நமது மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன  பொதுச்செயலர் தோழர் 16.03.2017 M .கிருஷ்ணன் அவர்களும் வேலைநிறுத்தம் குறித்த முக்கியத்துவத்தை தெரிவித்துள்ளார் (பார்க்க இணைப்பு ).வேற்றுமை கலைந்து ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு போராட்ட பாதையில் பயணிப்போம் .அஞ்சல் பகுதியில் எல்லா அமைப்புகளையும் உள்ளடக்கிய இயக்கத்தை பலமாக கட்டுவோம் 
   வெல்லட்டும் மார்ச் 16 வேலை நிறுத்தம் வெல்லட்டும் !SKJ 


SIGNIFICANCE OF CONFEDERATION’S ONE DAY STRIKE ON 16-03-2017
WHY NJCA SHOULD REVIVE THE DEFERRED INDEFINITE STRIKE
An article by M. Krishnan, Secretary General, Confederation

-----------------------------------------------------------------------





0 comments:

Post a Comment