...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 3, 2017

                          நேற்று முழுவதும் உத்தரவு மழைகள் 
தமிழகத்தில் 20 ஆய்வாளர்கள் ASP ஆக பதவி உயர்வு பெறுகிறார்கள் .குறிப்பாக நமது கோட்டத்தில் பணியாற்றிய தோழியர் G.கல்யாண சுந்தரி அவர்கள் ASP --ஆக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள் .அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .
                      4 ASP களுக்கு விருப்ப இடமாறுதல் கொடுத்துள்ளார்கள் .அதில் திரு .M .வீரபத்திரன் அவர்கள் சென்னைக்கு செல்கிறார்கள் அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் .
                   போஸ்ட்மாஸ்டர் கிரேட் II  பதவி உயர்வு பட்டியல் வந்துள்ளது .அதில் குமரி கோட்ட முன்னாள் தலைவரும் இன்றைய பொருளாளருமான திரு .ஜஸ்டின் ஜோஸ் அவர்களும் ஒருவர் .அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் .
             அதெல்லாம் சரி LSG பதவி உயர்வு இடமாறுதல் என்னவானது என்று கேட்பது தெரிகிறது --தென் மண்டலத்தில் அடுத்த வாரம் தான் அதற்கான உத்தரவுகள் வர வாய்ப்புகள் இருக்கிறது .கோட்டங்கள் தோறும் தனித்தனியாக விருப்பவிண்ணப்பங்கள் அடிப்படையில் இடமாறுதல்களை வழங்கிட தென் மண்டல நிர்வாகம் அதிக கவனமாக செயல்பட்டு வருவது பாராட்டுதலுக்கு உரியது .
 பதவி உயர்வில் விருப்பங்களை கேட்டு பணியமர்த்துவது இது ஒரு மிகப்பெரிய சாதனைதான் .இதற்கு செயல் வடிவம் தந்த மாநில நிர்வாகத்திற்கும் -மாநில செயலருக்கு மனமார்ந்த நன்றிகள் .
  தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment