...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, July 31, 2017

அன்பார்ந்த தோழர்களே !
 உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிட் டீர்களா ?
பழைய காலங்களை போல் கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை 31.07.2017 கடைசிநாள் மறந்து வீடாதீர்கள் .
-----------------------------------------------------------------------------------------------------
 மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுதான் கடைசி ஊதியகுழுவாம் --இனி ஊதியக்குழு கிடையாதாம் --இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ள செய்தியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளங்களை மாற்றியமைக்க  இனி பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை .அவ்வப்போது இது குறித்து Review செய்யப்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இருப்பதுபோல் wage review கமிட்டி போல் செயல்படுத்தப்படுமாம் ..இது  .விலை குறீயீட்டு அடிப்படையில் இருக்கும் .மேலும் DR.அக்ரோய்ட் பார்முலா பின்பற்றப்படுமாம் .இது நம்மீது அரசு காட்டும் பாசமா ? வேசமா ?
-----------------------------------------------------------------------------------------------------------------
அமிர்தசரஸில் 176 தபால்காரர்களுக்கு 27.07.2017 அன்று ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது .இது உடனுக்குடன் பட்டுவாடா தகவல்களை பதிவேற்ற பயன்படும்  .கூடிய  விரைவில் பார்சல் சேவைக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் 
நன்றி .தோழமைவாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை .
---------------------------------------------------------------------------------------------------------------------






Saturday, July 29, 2017

                                          மாநாடுகள் வெல்லட்டும் 
அன்பார்ந்த பேரவை சொந்தங்களே !
நாளை 30.07.2017 அன்று சேலம் மேற்கு கோட்ட மாநாடு நடக்கிறது .தோழர் புகழேந்தி அவர்களின் தலைமையில் மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன .மாநிலசெயலர் தோழர் JR .சுந்தரமூர்த்தி ஜேக்கப் ராஜ் மற்றும் காந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொள்கிறார்கள் .
                                    காரைக்குடி கவலை நீங்குகிறது 
சில பல காரணங்களால் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த காரைக்குடி கோட்ட மாநாடு நாளை 30.07.2017  நடைபெறுகிறது .இதற்கு முழு முயற்சிகளை எடுத்த நமது பேரவை தலைவர் KVS அவர்களுக்கும் காரைக்குடி தோழர் குருராஜன் அவர்களுக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .நமது நிதிச்செயலர் தோழர் A .வீரமணி அவர்கள் கலந்துகொள்கிறார்கள் .தமிழகத்தில் இனி எந்த கிளைகளும் செயலிழந்த கிளை இல்லை  எல்லா கோட்டங்களிலும் ஜனநாயகம் பூத்து குலுங்குகிறது என்ற செய்தி நமக்கு அமைப்பு ரீதியாக மேலும் ஒரு பலம் என்பதனை நினைவில்கொள்வோம் .
நன்றி SK .ஜேக்கப் ராஜ் 
-----------------------------------------------------------------------------------------------------------------

Friday, July 28, 2017

அன்பார்ந்த தோழர்களே !

2017 ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் உத்தரவுகள் நேற்று வந்துவிட்டது .எந்தவிதமான படபடப்போ --பரபரப்போ இல்லாமல் மிக அருமையான உத்தரவுகள் இது .இது நமது கண்காணிப்பாளர் அவர்களின் 56 வது பிறந்தநாள் பரிசாக ஊழியர்களுக்கு கொடுத்ததாக நாங்கள் மகிழ்கிறோம் .இதற்கு உறுதுணையாக இருந்த திரு .பொன்னையா ASP H/OS அவர்களுக்கும் மற்றும் அனைத்து ASP களுக்கும் குறிப்பாக நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு VPC அவர்களுக்கும் நெல்லை NFPE தன் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது .TENNURE முடியாத ஆனால் பல நியாயமான காரணங்களுக்காக இடமாறுதல் கோரும் ஊழியர்களின் கோரிக்கைகள் தனியாக பரீசீலிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

அன்பார்ந்த பேரவை சொந்தங்களே !
             தயாராகிறது பேரவை முரசு ---பேரவை தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு வருகிறது இந்த பரிசு 
எதை செய்தாலும் அதை நுட்பமாகவும் -ஊழியர்களுக்கு பயன் தரும் வகையில் அமைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த இதழை அருமைத்தலைவரின் ஆலோசனையின் பேரில் இதை தயாரித்திருக்கிறோம் .அகில இந்திய மாநாட்டிற்கு செல்லும் முன்பாக இந்த அறிமுக இதழை வெளீயிடலாம் என இருக்கிறோம் .இதோ இந்த முரசின் முகப்பு தோற்றம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை கோட்ட செயலர் 

Thursday, July 27, 2017

                                                   வருந்துகிறோம் 
தோழர் S .ராம்குமார் GDSMD தச்சநல்லூர் அவர்களின் தகப்பனாரும் -நாரணம்மாள்புரம் GDSBPM திருமதி கலாதேவி அவர்களின் கணவருமான திரு சங்கரசுப்பு ராஜா (84)அவர்கள் 27.07.17 அன்று அதிகாலை  இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 27.07.2017 மாலை 4 மணிக்கு பாளையம்கோட்டை வெள்ளைக்கோயிலில் நடைபெறுகிறது .அன்னாரை பிரிந்துவிடும் தோழர் ராம்குமார் மற்றும் தோழியர் கலாதேவி அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .
(இல்லம் --சக்திநகர் சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் )
SK .ஜேக்கப் ராஜ்   SK .பாட்சா S .காலப்பெருமாள் 

                                                          முக்கிய செய்திகள்
நெல்லை கோட்டத்தில் இன்று சுழல் மாறுதலுக்கான கமிட்டி கூடுகிறது 
அகில இந்திய மாநாட்டிற்கு வருகிறவர்கள் கவனத்திற்கு .......
GST நேரடி தாக்குதலை  இப்பொழுது தான் நேரடியாக உணர முடிந்தது .ஆம் .GST யை காரணம் காட்டி அகில இந்திய மாநாட்டு சார்பாளர் கட்டணம் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 1500 இல் இருந்து ரூபாய் 2000 ஆக  உயர்வு .மேலும் மாநாட்டிற்கு வருகிறவர்கள் தங்களது அடையாள அட்டையின் நகல் ஒன்றை கொண்டு வரவும் .நமது கோட்டத்தில் 32 தோழர்கள் அகிலஇந்திய மாநாட்டிற்கு வருகிறார்கள் .ஆகவே ஏற்கனேவே சிறப்பு விடுப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களும் தனியாக தங்களது சொந்த EL விடுப்பு விண்ணப்பத்தையும் 05.08.2017 முதல் 10.08.2017 வரை கொடுக்கவும் 
------------------------------------------------------------------------------------------------------------            
   
27.07.2017 அன்று நடைபெறும் BSNL ஊழியர்களின் ஒரு வேலை நிறுத்தம் வெல்லட்டும் 
 பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் நடைபெற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை எதிர்த்து 
இன்று BSNL ஊழியர்கள் சங்கமும் அதிகாரிகள் சங்கமும் இனைந்து ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர் .ஊதிய மாற்றம் நடைபெறும் ஆண்டிற்கு முந்தைய மூன்றாண்டுகளின் வரிக்கு முந்தைய லாபத்தின் சாராரியில் 20 % க்கு மிகாமல் கூடுதல் செலவீனம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதி அற்றவர்களாகின்றனர் .இந்த பிரதான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் வேலைநிறுத்தம் வெல்லட்டும் .
------------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் துறையில் வருகிற 23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தம் --தயாராகுவீர் 
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE சம்மேளனம் சார்பாக வருகிற 23.08.2017 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது .அதற்கான வேலைநிறுத்த நோட்டீஸ் நேற்று 26.07.2017 அன்று கொடுக்கப்பட்டுள்ளது
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை  
--------------------------------------------------------------------------------------------------------------------------
                      

Wednesday, July 26, 2017

நெல்லை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா நெல்லையில்(26.07.2017) இன்று பலஇடங்களில் கொண்டாடப்பட்டது .திருநெல்வேலி HO வில் நடந்த விழா காட்சிகள் 

 முன்னதாக நமது ME திரு ராஜேந்திர போஸ் அவர்களின் வாழ்த்து கவிதை  

                                          வருந்துகிறோம் 

தோழர் ராம்குமார் PA அம்பாசமுத்திரம் அவர்களின் தாயார் திருமதி செல்லம்மாள் (66) அவர்கள் 25.06.2017 இரவு காலமானார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 26.07.2017 மதியம்  2மணிக்கு திருநெல்வேலி குறுக்குத்துறை  மின்மயானத்தில் நடைபெறும் .நெல்லை  NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

                                                  முக்கிய செய்திகள் 
கேடர் சீரமைப்பு அமுலாக்கம் நிறுத்திவைப்பு --இது குறித்து அஞ்சல் வாரியம் 25.07.2017 அன்று வெளியிட்ட கடிதத்தில் கேடர் சீரமைப்பு அமுலாக்கத்திற்கு பிறகு எழுந்த பிரச்சினைகள் குறித்து ஆராய நமது முன்னாள் CPMG இன்றைய கர்நாடகா CPMG திரு சார்லஸ் லோபோ அவர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதால் கேடர் உத்தரவுகளை அமுல்படுத்துவதை நிறுத்தி வைக்க கூறி உள்ளது .இது சென்றவர்களுக்கு லாபம் --நின்றவர்களுக்கும் லாபம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
கேடர் சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டியின் முதல் கூட்டம் 02.08.2017 அன்று நமது இயக்குநரகத்தில் நடைபெறுகிறது .நமது சம்மேளனத்தின் சார்பாக அகிலஇந்திய தலைவரும் நமது மாநிலசெயலருமான தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் பங்கேற்கிறார்கள் .
LSG பதவிகளை கோட்ட மட்ட அளவிலான பதவிகளாக மாற்றுவது -நகர் பகுதிகளில் மேலும் புது LSG பதவிகளை உயர்த்துவது போன்ற ஊழியர்கள் நேரிடையாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எடுக்கப்பட்டுள்ளன .ஏற்கனேவே இதுகுறித்து விரிவான கோரிக்கைமனு நமது சம்மேளனம் சார்பாக அருமை தோழர் KVS அவர்களின் வழிகாட்டுதலில் கொடுக்கப்பட்டுள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------
பயிற்சி காலங்களையும் MACP பதவியுயர்கவுளுக்கும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் அசாம் ,ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .நமது மாநிலத்தில் இது குறித்து நமது மாநிலச்சங்கம் வலியுறுத்தி வந்த போதிலும் -எதிர்வரும் CPMG அவர்களுடன் நடக்கும் RJCM கூட்டத்தில் விவாதிக்க சேர்க்கப்பட்டுள்ளது
------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று (26.07.2017 )நமது DPS அவர்களை மாநிலச்சங்க அனுமதியோடு தோழர்கள் சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் சந்திக்கிறார்கள் 
ஏற்கனவே 03.07.2017 அன்று சந்தித்தபின் அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடக்கிறது .
 .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
-------------------------------------------------------------------------------------------------------------------


Tuesday, July 25, 2017

                                            முக்கிய செய்திகள் 
24.07.2017 அன்று நமது கோட்டத்தில் முதுநிலை கண்காணிப்பளர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெற்றது .காலை 10.45 க்கு தொடங்கிய பேட்டி மதியம் 1.30 வரை நீடித்தது .மீண்டும் இரவு 7.30 மணிக்கு விடுபட்ட ஒரு முக்கிய பிரச்சினை குறித்தும் மிக அழுத்தமாக விவாதிக்கப்பட்டது .
1.தோழர் .N .கண்ணன் அவர்களுக்கு பிடிக்கப்பட்ட HRA சம்பந்தமாக நாம் கொடுத்த ஆலோசனை ஏற்கப்பட்டு தோழர் அவர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது .
2.RT வரை ACCOUNTANT பதவிகளை அந்தந்த HEAD POST MASTER அவர்களே தேர்வான கணக்கர்களை வைத்து நிரப்பிட முடிவெடுக்கப்பட்டது .
3.திருநெல்வேலி CPC பிரிவிற்கு உள்ள தொலைபேசியில் 2322274 OUT GOING வசதி கேட்டு GM திருநெல்வேலி அவர்களுக்கு எழுதிய கடித நகல் நம்மிடமே கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை அணுக அனுமதிக்கப்பட்டது .
4.திருநெல்வேலி தெற்கு அஞ்சலகத்திற்கு மேலும் ஒரு ஊழியரை இணைப்பதற்கான முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
5.நான்குனேரிக்கு புதிதாக நாற்காலிகள் வாங்கப்பட்டு கோட்ட அலுவலகத்தில் இருக்கிறது .விரைந்து அனுப்பப்படும் .
6.பொட்டல்புதூர் அஞ்சலகத்தில் காலியான தபால்காரர் பதவியை GDS மூலம் நிரப்பிட அனுமதிக்கப்பட்டது .
7.HSG I மற்றும் HSG II பதவிகளை தற்காலிகமாக நிரப்பிட தற்சமயம் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு மண்டல அலுவலக வழிகாட்டுதல்களை கேட்டுள்ளது .இருந்தாலும் LSG பெற்றவர்களின் விண்ணப்பங்களில் மருத்துவ காரணங்களுக்கான விண்ணப்பங்கள் பரீசிக்கப்படும் 
8.நமது கோட்டத்திற்கு நம்மிடம் GDS ஆக பணிபுரிந்து இன்று APS இல் பணியாற்றும் தோழர் நாகராஜ்  (PA திருவண்ணாமலை )அவர்களுக்கு மீண்டும் திருநெல்வேலிக்கு மறு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது .தோழர் நாகராஜ் அவர்களை வாழ்த்துகிறோம் .
                                       மண்டல செய்திகள் 
விருதுநகர் கோட்டத்தில் 16 ஊழியர்களின் விருப்பத்திற்கு மாறாக இடப்பட்ட உத்தரவுகள் நேற்று நமது மாநிலசெயலரின் தலையீட்டினாலும் நமது மூத்த தோழர்கள் S.சுந்தரமூர்த்தி மற்றும் L.சண்முகநாதன் அவர்களின் அனுபவ ரீதியான முயற்சிகளின் விளைவாலும் ஊழியர்களின் விருப்பத்திற்கு மாறாக போடப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்டது  --மாநிலசெயலர் ,தூத்துக்குடியில் ஆய்வில் இருந்த நமது PMG அவர்களிடமும்  -தல்லாகுளம்HO விற்கு  வந்த நமது இயக்குனர் அவர்களை தோழர் சுந்தரமூர்த்தி அவர்களும் நிலைமையை விளக்கி கூறி மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்திட முயற்சிகளை எடுத்துள்ளனர் .தோழர் JR -SS அவர்களின் கூட்டு முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் .நமது மண்டலத்தில் வரலாறு திரும்புகிறது --ஊழியர்களிடையே புது நம்பிக்கை அரும்புகிறது --கோட்ட கிளைகள் இந்த ஒற்றுமையைத்தான் விரும்புகிறது 
நன்றி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, July 24, 2017

நெல்லையில் 22.07.2017 &23.07.2017 ஆகிய நாட்களில் நடைபெற்ற அஞ்சல்நான்கின் கோட்ட மாநாடு --மாநிலசெயற்குழு மற்றுமொரு சரித்திரம் 
கோட்ட மாநாட்டில் ஒருமனதாக நிர்வாகிகள் தேர்வு 
இளைய தோழர்கள் அடையாளங்காணப்பட்டு ;பொறுப்புகள் ஒப்படைப்பு 
இரண்டுநாட்கள் அருஞ்சுவை உணவுகள் --தோழமை பரிமாற்றங்கள் 
கோட்ட செயலர் பாட்சா தலைவர் சொக்கலிங்கம் பொருளாளர் இசக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் --மாநில செயற்குழுவில் தோழர் SKJ அவர்களை அனைவரும் வாழ்த்தினார்கள் -- மாநிலசெயலர் G.கண்ணன் அவர்களின் தீர்மான முன்மொழிவுகள் --மூத்ததோழர்கள் AGP அண்ணன் K .சிவராமன் ராஜேந்திரன்,சம்மேளன செயலர்  தோழர் ரகுபதி --கோவை கருணாநிதி உள்ளிட்ட தோழர்களின் வாழ்த்துரை அனைத்தும் அருமை --நெல்லைக்கு மீண்டும் பெருமை 
புதியவர்களை அழகுபடுத்தி பார்க்கும்புதுமை  --நிர்வாகத்தை மலைக்க வைக்கும் தலைமை --




Friday, July 21, 2017

24.07.2017 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டிக்கான SUBJECTS இங்கே தரப்பட்டுள்ளது .முன்னதாக திருத்தம் செய்யப்படாத /இறுதிசெய்யப்படாத கடிதம் தவறுதலாக பிரசுரிக்கப்பட்டுள்ளது .தவறுக்கு வருந்துகிறேன் .SKJ 

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                       
       Tirunelveli Divisional Branch
TIRUNELVELI-627001
--------------------------------------------------------------------------------------------------------
No.P3-MM-/ dated at TVL 627001 the20.07.2017
To

The Sr.Supdt of POs
Tirunelveli Division
Tirunelveli--627002


Sir
            Sub: Subjects for monthly meeting to be held on 24.07.2017-reg.
--------

The following subjects may please be included for discussion during the monthly meeting.

1.      Request to issue of officiating orders c/o Sri N.Kannan who was officiating as Postmaster, Palayankottai for the purpose of drawl of HRA for the period from 05.10.2014 to 28.02.2017.

2.      Request posting of one qualified Accountant on deputation basis at Accounts Branch of Tirunelveli HO since the present Accountant has also performing the duties of APM(A/Cs) which is vacant for past 3 years.

3.      Request to provide outgoing facility for the land line phone of CPC, Tirunelveli HO.

4.      Request attachment of one additional hand to Tirunelveli South SO in consequent shifting of Tirunelveli Town to new building as the work load is manifold increased due to the transactions performed by the residents of Tirunelveli Town.

5.      Request to take action to post one lady Medical Officer at Postal Dispensary which is a justified one as per the revised norms.

6.      Request to take action to extend the generator connection to Work Place Training Centre, Palayankottai HO

7.      Request provision of proper and needy equipments to Work Place Training Centre, Palayankottai HO since our staff have to for some other places to attend AADHAAR Online examination.
8.      Request drawal of arrears of allowances to the substitutes worked in Postal Dispensary as per 7th CPC recommendations.

9.      Request supply of two counters for Nanguneri.

10.      Request to give reply on the action taken for this union’s letters addressed to the SSPOs., as detailed below as no reply is so far received which is creating resentment among the staff.

(a)No P3-Misc /dlgs dated 17.04.2017
(b)No P3-Misc /dlgs dated 26.04.2017
(c)No P3-Misc /dlgs dated 27.04.2017
(d)No P3-Misc /dlgs dated 02.05.2017
(e)No P3-Misc /dlgs dated 05.06.2017

11.      Request finalise the case of VK.Puram cycle shed .

12.      Request to shift the Ambai Angadi PO Buinding io a better one.



   The following officials will attend the meeting

1.S.K.Jacobraj Divisional Secretary &LSG PA CPC Tirunelveli HO
2.C.VannamuthuAsst Secretary,SPM Viraraghavapuram SO
3.R.V.Thiyagarajapandian, Branch Secretary &SPM Kilambur SO


Yours faithfully,


[S.K. JACOBRAJ]

நெல்லை அஞ்சல் நான்கின்  37 வது மாநாடு தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் தோழர் பாட்சா அவர்களின் செயலாற்றலில் வெற்றிபெற வாழ்த்துகிறோம் .



                                              முக்கிய செய்திகள் 
MACP பதவியுயர்வில் நேரடி நியமன ஊழியர்களைப்போல் இலாகா தேர்வு மூலம் வந்தவர்களையும் கருதவேண்டும் பெங்களூரு தீர்பாயகம்மேலும் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------
நெல்லையில் 22.07.2017 அன்று மாலை நடைபெறும் அஞ்சல் நான்கின் 37 வது கோட்ட மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------
இந்தமாத மாதாந்திர பேட்டி 24.07.2017 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் ,
C .வண்ணமுத்து RV.தியாகராஜபாண்டியன் அவர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா ,M.ஆசைத்தம்பி R.ஆதிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் 
தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் --SK பாட்சா 
---------------------------------------------------------------------------------------------------------------------- 

Thursday, July 20, 2017

                                        முக்கிய செய்திகள் 
FMA ரூபாய் 500 இல் இருந்து 1000 ஆக  உயர்வு --இதற்கான உத்தரவு வந்துவிட்டது 
No.4/34/2017-P&PW(D)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
(Department of Pension & Pensioners' Welfare)
3rd Floor. Lok Nayak Bhawan,
Khan Market. New Delhi-110 003.
Dated the 19th July, 2017
OFFICE MEMORANDUM
Subject: Grant of Fixed Medical Allowance (FMA) to the Central Government Pensioners residing in areas not covered under CGHS.
2. Consequent upon the decision taken by the Government on the recommendations of the 7th Central Pay Commission on Allowances (with modifications), sanction of the President is hereby conveyed for enhancement of the amount of Fixed Medical Allowance from Rs.500/- to Rs.1000/- per month. The other conditions for grant of Fixed Medical Allowance shall continue to be as contained in this Department’s OMs No. 45/57/97-P&PW(C) dated 19.12.1997, 24.8.1998, 30.12.1998, 18.8.1999 and OM No. 4/25/2008-P&PW(D) dated 19.11.2014.

3. These orders will take effect from 01.07.2017.
----------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் ஆய்வாளர்களுக்கான GP  --தகுதியூதியம் ரூபாய் 4600 என நிர்ணயம் செய்து அதை 01.01.2006 முதல் வழங்க உத்தரவு .முன்னதாகஎர்னாகுளம் CAT இல் தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் அரசு சார்பான SLP யை தள்ளுபடி செய்தது 
-----------------------------------------------------------------------------------------------------------
மாதாந்திர பேட்டிக்கான SUBJECTS அனுப்பாதவர்கள் உடனே அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .உயர்பதவியில் OFFICIATING பண்ணுவதற்கு ஊழியர்களின் மத்தியிலுள்ள ஆர்வங்கள் வரவேற்கத்தக்கது .
---------------------------------------------------------------------------------------------------
சூழல் மாறுதல் உத்தரவுகளை 31.07.2017 குள் முடிக்க சென்னை மண்டல PMG அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

Wednesday, July 19, 2017

                                            முக்கிய செய்திகள் 
GDS பதவிகளை நிரப்ப பெறப்பட்ட விண்ணப்பங்களில் விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது .தமிழகத்தை பொறுத்தவரை 1443000 பேர் பதிவு செய்திருந்தாலும் அனைத்து விண்ணப்பங்களும் அனுப்பப்படவில்லை .ஆகவே ஏற்கனவே பதிவு செய்து சான்றிதழ் கிடைக்காமல் அல்லது வேறு காரணங்களுக்காக விண்ணப்பிக்காதவர்கள் 14.08.07 முதல் 19.08.2017 வரை அதே பதிவென்னில் விண்ணப்பிக்கலாம் .புதிய பதிவுகள் கிடையாது 
தமிழகத்தில் 250  பதவிகளுக்கு 144300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
                             நெல்லை மாநகர பகுதியில் பணிபுரியும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு நெல்லை B2 அந்தஸ்தை பெற்றிருந்தாலும் மக்கள் தொகை 5 லட்சத்துக்கு குறைவாத்தான் இருக்கிறது .அதனால் நமக்கு 8 சதம் HRA கிடைக்கிறது .2011 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 473600 பேர் தான் வசிக்கிறார்கள் .நெல்லை மாநகராட்சியின் முந்தைய தீர்மானத்தில் கூறியிருந்தபடி KTC நகர் விரிவாக்கப்பகுதிகளை மாநகரத்தோடு இணைத்தால் மக்கள் தொகை 5 லட்சத்தை தாண்ட வாய்ப்பிருக்கிறது அந்த முயற்சியில் நாமும் செயல்படுவோம் .
                                           சுழல் மாறுதல் 2017
சுழல் மாறுதலுக்கான ஆரம்ப பணிகள் தொடங்கிவிட்டன .மண்டல அளவில் விசாரித்ததில் EXTENSION ஐயை பொறுத்தவரை ஒருமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .மேலும் ஒரு மனு பரீசீலனையிலும் ஏற்கனேவே குழந்தைகளின் மருத்துவ/மனரீதியான  காரணங்களின் அடிப்படையில் இரண்டு தோழர்களுக்கு EXCEPTION FROM TRANSFER அனுமதிக்கப்பட்டுள்ளது .மற்றவைகள் 24.07.2017 மாதாந்திர பேட்டிக்கு பிறகு தெரிவிக்கப்படும் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா  

Tuesday, July 18, 2017


நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் !
மாதாந்திர பேட்டியை உடனே நடத்த வேண்டும் .கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை .பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது .மேலும் அரைகுறையாக கோரப்பட்ட OFFICIATING விருப்பமனுக்கள் ஊழியர்களை மீண்டும் ஒரு .ஏமாற்றத்திற்கு அழைத்து சென்றுள்ளது .நெல்லையில்HSG I பதவிகள்  DY போஸ்ட்மாஸ்டர் பாளை ,SPM சங்கர்நகர் SPM நாங்குநேரி SPM வீ .கே .புரம் என 4 பதவிகள் காலியாக இருக்கின்றது . HSG II பதவிகள் இன்னும் நிரப்பப்படவேண்டியவைகள் APM பாளை   . PRI பாளை PRI திலி 
ASPM  டவுன் --SPM கலட்ரெட்-- SPM தச்சநல்லூர் ---SPM பேட்டை-- SPM மானுர் ,வடக்கன்குளம் ராதாபுரம் முலைக்கரைப்பட்டி முக்கூடல் ஆழ்வார் குறிச்சி என இருக்கிறது .இது GP 4200 வாங்குகிற ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .இதுதான் மாநில நிர்வாகத்தின் உத்தரவு .ஆகையால் நேற்று அறிவிக்கப்பட்ட PRI பதவிகளுடன் அனைத்து பதவிகளையும் சேர்த்து OFFICIATING பார்க்க விருப்பமனுக்களை கோரா வேண்டும் என நெல்லை கோட்ட சங்கம் வலியுத்துகிறது --வலியுறுத்தும் .
NFPE
                      ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                         Tirunelveli Divisional Branch
TIRUNELVELI-627001
--------------------------------------------------------------------------------------------------------
No.P3-Misc/dlgs dated at TVL 627001 the 17.07.2017
To

The Sr.Supdt of POs
Tirunelveli Division
Tirunelveli--627002


Sir
            Sub : Request conducting of Monthly Meeting - reg
                                  -----------

            We would like to draw the attention of the SSPOs.,on the subject that the monthly meeting with the SSPOs., was last held during April-2017 only.  Even after lapse of two months no monthly meeting was held with Service Associations.

            Hence it is requested to conduct the monthly meeting properly enabling early settlement of staff problems.
           
                        Thanking you

Yours faithfully,



[S.K. JACOBRAJ]
---------------------------------------------------------------------------------------------------------------------









நெல்லையில் நடைபெறும் தபால்காரர் சங்கத்தின் 37 வது மாநாடு வெல்லட்டும் 
அன்பார்ந்த எங்களருமை தபால்காரர் /MTS தோழர்களே !
வருகிற 22.07.2017 அன்று மாலை 6 மணிக்கு நமது திருநெல்வேலி கோட்டசங்கத்தின் 37 வது மாநாடு திருநெல்வேலி ராஜ் மகாலில் நடைபெறுகிறது .அதற்கு முன்னதாக  கோட்ட செயற்குழு 17.07.2017 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது .மாநாட்டினை தொடர்ந்து மாநில செயற்குழு 23.07.2017 மாலை வரை அதே இடத்தில நடைபெறுகிறது .ஆகவே அனைத்து தோழர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
நேற்றைய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் 
1.திருநெல்வேலி மாநகராட்சி B2 --அந்தஸ்தை பெற்றபிறகும் மக்கள்தொகையினை கணக்கில் காட்டி நமக்கு Z பிரிவிற்கான 8 சதம் HRA நிர்ணயிக்கப்பட்டது தவறு ஏற்கனவே மாநகராட்சி தீர்மானத்தின் அடிப்படையில் KTC நகர் விரிவாக்கப்பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சிகளை துரிதப்படுத்தவும்நெல்லைக்கு Y அந்தஸ்துக்கான 16 சதம் HRA வழங்க   நடவடிக்கை எடுக்கப்படும் 
2.திருநெல்வேலி அஞ்சல் மருத்துவமனைக்கு ஒரு பெண் மருத்துவரை நியமிக்கவேண்டும் .
3.திருநெல்வேலி அஞ்சலகத்தில் கழிவறை கட்ட அனுப்பப்பட்ட வரைவு திட்டம் --பாளையங்கோட்டையில் அஞ்சலக வளாகத்தில் வாடிக்கையாளர்களுக்கான தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர நிர்வாகம் நிதிநிலையை காரணம்காட்டி தாமதித்தால் நமது பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜிலா சதியானந்த் அவர்களை அணுகி அவர்களின் தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து உதவிகள் கோருவது 
4.பாளையம்கோட்டையில் மீண்டும் கேண்டீன் தொடங்க புதிய இயக்குனர் அவர்களை மாநிலச்சங்கம் மூலம் முயற்சிகள் எடுப்பது 
5.KTC நகர் அஞ்சலகத்தை  டெலிவரி அலுவலகமாக தரம் உயர்த்தப்படுவதை விரைவு படுத்துவது 
6.பெருமாள்புரம் ,தச்சநல்லூர் விரிவாக்க பகுதிகளின் பட்டுவாடா தூரத்தை கணக்கிட்டு தேவைப்பட்டால் புதிய தபால்காரர் பதவிகளை உருவாக்குவது போன்ற தீர்மானங்கள் கோட்ட மாநாட்டில் நிறைவேற்ற முடிவுகள் எடுக்கப்பட்டது .
 மாநாட்டில் புதிய உறுப்பினர்களை அதாவது இளம் தபால்காரர்களை முழுவதுமாக பங்கேற்க வைப்பதற்காக நமது இளைய தோழர்கள் 
தோழர்சுபாஷ் சிந்து --பெருமாள் புரம் தோழர் பாலசுப்ரமணியன் -பாளையம்கோட்டை தோழர் ருக்மணி கணேசன் வள்ளியூர் முனைப்பாக செயல்பட கோட்ட சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது 
நன்றி .மாநாட்டு வெற்றி வாழ்த்துக்களுடன் 
                             SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா --


Monday, July 17, 2017

மாதாந்திர பேட்டியை விரைந்து நடத்திடுக ! மலைபோல் தேங்கிக்கிடக்கும் ஊழியர்கள் பிரச்சினைகள் --தீர்வு கானும் உன்னத இடம் மாதாந்திர பேட்டி 
                                                                       NFPE
                            ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                    Tirunelveli Divisional Branch
TIRUNELVELI-627001
--------------------------------------------------------------------------------------------------------
No.P3-Misc/dlgs dated at TVL 627001 the 17.07.2017
To

The Sr.Supdt of POs
Tirunelveli Division
Tirunelveli--627002


Sir
          Sub : Request conducting of Monthly Meeting - reg
                                  -----------

          We would like to draw the attention of the SSPOs.,on the subject that the monthly meeting with the SSPOs., was last held during April-2017 only.  Even after lapse of two months no monthly meeting was held with Service Associations.

          Hence it is requested to conduct the monthly meeting properly enabling early settlement of staff problems.
         
                        Thanking you

Yours faithfully,


[S.K. JACOBRAJ]

Friday, July 14, 2017

நெல்லை அஞ்சல் கோட்ட அஞ்சல் நிர்வாகமே !
 நெல்லை கோட்டத்தில் விடுபட்டஅனைத்து காலியாகவுள்ள HSG II மற்றும் HSG I பதவிகளுக்கு மாநில நிர்வாக வழிகாட்டுதல்படி விருப்பமனுக்களை பெற்று நிரப்பிடுக !இதனால் பதவி பதவி உயர்வில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குறைகள் களைய உதவியாக இருக்கும் .
NFPE
                        ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                    TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-Misc/dlgs dated at Palayankottai- 627002 the 14.07.2017

To

The Sr. Supdt.of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

          Sub:   Filling up of vacant HSG-I/HSG-II Posts on officiating basis
                    in Tirunelveli Division - reg


          We would like to bring the content of the C.O Lr No. STA/2-81/2017 dated 16.02.2017 in which it is stated that the officiating arrangement for the HSG-I/HSG-II regular/leave vacancies may be given to the officials satisfying the service conditions.

          Hence, it is requested you to call for willingness for all such vacant posts among the eligible officials and fill up the same on temporary/officiating basis instead of calling for volunteers for a particular posts which will create an ill-opinion about the functioning of the administration and also create unrest among the staff.

          This union believes on the impartial/transparent functioning of Divisional Administration to ensure smooth functioning of the Division.
           

                         Yours faithfully


[S.K.JACOBRAJ]




Copy to : 1. Circle Secretary, AIPEU Group C, Tamilnadu Circle, Chennai-600018

                    நெல்லை அஞ்சல் நான்கின் 37 வது மாநாடு 
                அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் 



                                           முக்கிய செய்திகள் 
GDS கமிட்டி அமுலாக்கத்திற்க்கான கோப்புகள் நமது அமைச்சக ஒப்புதல் பெற்று நேற்று நிதியமைச்சகத்திற்கு சென்று விட்டன .நிதியமைச்சக ஒப்புதலுக்கு பின் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு வெளிவரும் .
----------------------------------------------------------------------------------------------------------
           நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயற்குழு
நாள் 17.07.2017 திங்கள் 
நேரம் மாலை 6மணி 
இடம் பாளையம்கோட்டை 
தலைமை  தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் 
பொருள்1. ஈ ராண்டறிக்கை சமர்ப்பித்தல் -ஒப்புதல் பெறுதல் 
                    2.தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை               சமர்ப்பித்தல் -ஒப்புதல் பெறுதல் 
                  3.இன்னும் பிற தலைவர் அனுமதியுடன் 
                        அனைவரும் வருக !
                                                     மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
                                                             SK .பாட்சா 
                                                             கோட்ட செயலர் P4 நெல்லை
---------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, July 13, 2017

ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் அலவன்சுகள்  உயர்த்தப்பட்டுள்ளது .அதுகுறித்து 03.07.2017 உத்தரவின் சுருக்கம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது 
1.வீட்டுவாடகைபடி 
X --AI -A நகரங்கள் தமிழகத்தில்( சென்னை) அடிப்டைசம்பளத்தில் 24 %
Y--மாநகராட்சி அந்தஸ்து (5 லட்சம் மக்கள் தொகை) 16%
Z -இதர நகரங்கள் நெல்லை உட்பட                                        8 %
பஞ்சப்படி 25 சதம் கூடும்பொழுது முறையே 27-18-9 ஆகவும் பஞ்சபடி 50சதத்தை தாண்டும்பொழுது 30-20-10 என உயரும்
2.போக்குவரத்து படி 
A மற்றும் AI நகரங்களில் GP 5400க்குமேல் அதாவது லெவல் 9 க்கு 7200+பஞ்சபடி மற்ற நகரங்களுக்கு 3600+பஞ்சப்படி 
A மற்றும் AI நகரங்களில் GP2000-4800வரை  அதாவது லெவல் 3-8 க்கு 3600 +பஞ்சபடி மற்ற நகரங்களுக்கு 1800+பஞ்சப்படி 
A மற்றும் AI நகரங்களில் GP 1900 வரை  அதாவது லெவல் 1-2  க்கு 1350+பஞ்சபடி மற்ற நகரங்களுக்கு 900 +பஞ்சப்படி 
(இது மாற்றுத்திறனாளிகளுக்கு இரட்டிப்பு மடங்கு }குறைந்தபட்சம் 2250+பஞ்சப்படி 
3.பயணப்படி TA /DA 
லெவல் 5& 5க்குகுறையான அதாவது GP 2800வரைரூபாய்  500
லெவல் 6-8 அதாவது 4200-4800 வரை  ரூபாய் 800
லெவல் 9-11 அதாவது 5400-7600வரை ரூபாய் 900
(இது தலைமையிடத்திலிருந்துகடந்து  6 மணிநேரம் வரை 30%
6-12மணிவரை 70%
12மணிநேரத்திற்குமேல் 100%
 4.குழந்தைகள் கல்வி தொகை CEA 
மாதம் 2250
பஞ்சப்படி 25 மற்றும் 50சதம் வரும்பொழுது மாறும்
5.சைக்கிள் அலவன் ஸ் மாதம் ரூபாய் 180
6. பஞ்சப்படி --பழைய டிநிலையில் 
மருத்துவப்படிFMA ரூபாய் 1000
8.இரவு நேர படி --பதவிகளுக்கு தகுந்து நிர்ணயிக்கப்படும் 
9.மிகுதி நேரப்படி --ஒழிக்கப்படுகிறது
10.SPLITDUTY ==50சதம் அதிகரிக்கிறது 
கிட்டத்தட்ட 43 படிகளுக்கான உத்தரவு இது .நமக்கு அன்றாட பயன்பாட்டிற்குள்ளவைகள் மட்டும் கொடுக்க பட்டுள்ளன 
குறிப்பு --புதிய படிகள் அனைத்து ஜூலை INCREMENT அடிப்படையில் கணக்கில் எடுக்கப்படும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  

Wednesday, July 12, 2017

 டிராவை நோக்கி செல்கிறதா 13.07.2017 வேலைநிறுத்தம் ?
ஒருங்கிணைப்புக்குழு அறிவிக்கும் வரை பொறுமை காத்திடுக !
அன்பார்ந்த தோழர்களே !
தமிழ்மாநில NFPE ஒருங்கிணைப்புக்குழு சார்பாக 13.07.2017 அன்று வேலைநிறுத்தம் நடைபெறுவதாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அதனடிப்படையில் தொழிலாளர் நல ஆணையத்துடன் நேற்றும் பேச்சு வார்த்தை நடைபெற்றது .இன்றும் தொடர்கிறது .நமது நிர்வாகிகள் இன்று மதியமும் CPMG அவர்களை இது சம்பந்தமாக பேசஇருக்கிறார்கள் இதற்கிடையில் கோட்ட அலுவலகங்களில் இருந்து வழக்கமான வேலைநிறுத்த காலங்களில் செய்யப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன .
இருந்தாலும் கோட்ட /மாநில அளவில் தகவல்கள் கிடைக்கும் வரை தாங்கள் எந்த முடிவும் எடுத்திட வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் .வேலை நிறுத்தம் சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்ள 8610067106 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா நெல்லை