...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, August 18, 2017

        அடுத்து வருகிறது 23.08.2017 ஒரு நாள் வேலைநிறுத்தம் 
அஞ்சல் துறையில் NFPE சம்மேளனம் கடந்த ஜூன் 20 முதல் மூன்று கட்ட இயக்கங்களை நடத்திவிட்டு இன்று நான்காம் கட்டமாக 23.08.2017 அன்று ஒருநாள் வேலைநிறுத்த தயாரிப்பில் இறங்கியிருக்கிறோம் .மேலோட்டமாக பார்த்தால் வழக்கமான தலைவர்களின் வேலைநிறுத்த பிரச்சார பயணங்களோ --கோட்டங்கள் தோறும் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளோ இந்த வேலைநிறுத்தம் குறித்து இன்னும் அதிகமாக வந்திடவில்லை .இன்றைய WHATSAPP காலங்களில் ஊழியர்களிடையே தகவல்களை பரிமாறிக்கொள்வதில் அதிக சிரமங்கள் இல்லையென்றாலும் --இது முழுக்க முழுக்க அஞ்சல் பகுதி பிரச்சினை என்பதற்காவது இன்னும் அதிகமான தயாரிப்பிகளில் நாம் ஈடுபட வேண்டும் .
வேலைநிறுத்தம் என்றால் ஊழியர்கள் துள்ளி குதிக்க வேண்டும் -வேலைநிறுத்த கோரிக்கைகள் தொழிலாளியின் உள்ளத்தை கவ்வி பிடிக்க வேண்டும் -அத்தகைய போராட்டங்கள் தான் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது .இந்த வேலைநிறுத்தங்களில் நாம் பிரதானப்படுத்தவேண்டிய முக்கிய கோரிக்கை அஞ்சல் துறைக்கும் வாரம் ஐந்து நாட்கள் வேலைநாட்கள் வேண்டும் .அதாவது சனிக்கிழமை விடுமுறைவேண்டும் என்பதே .
அகிலஇந்திய மாநாட்டில் கூட இந்த வேலைநிறுத்தம் குறித்து எத்தனை சார்பாளர்கள் பேசியிருப்பார்கள் --எத்தனை தலைவர்கள் வேலைநிறுத்த தயாரிப்புகளை குறித்து விளக்கமளித்தார்கள் என்பதை மாநாட்டில் கலந்துகொண்ட தோழர்களுக்கு தெ(பு )ரியும் .இதர கோரிக்கைகளில் ஒன்றான 2015 இல் நடந்த உறுப்பினர்  சரிபார்ப்பின் முடிவுகளை வெளியிடவேண்டும் என்பது -உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளுக்கு முன்பே பாரதிய சங்கம் --போஸ்ட்மாஸ்டர் கேடர் சங்கம் அங்கீகாரம் பெற்றுவிட்டது .2015 இல் இருந்து இன்றுவரை ஏன் இதை அனுமதித்தோம் என்று தெரியவில்லை .மற்றுமொரு கோரிக்கையான அஞ்சல் துறையில் புகுத்தப்படும் புதிய திட்டங்கள் என்ற பெயரில் ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் .GDS பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் இருக்கிறது .நிச்சயம் இந்த வேலைநிறுத்தத்தில் நாம் முழுமையாக பங்கேற்போம் .
இதுகுறித்து நாம் கலந்து பேசிட நெல்லை கூட்டு பொதுக்குழுவிற்கு வாரீர் !
                                       நெல்லை கூட்டு பொதுக்குழு
நாள் -22.08.2017  செவ்வாய்  மாலை 6 மணி
இடம் திருநெல்வேலி தலைமைஅஞ்சலகம்
தலைமை     தோழர் KG குருசாமி
                          தோழர் .A.சீனிவாச சொக்கலிங்கம்
பொருள்   1. 23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தம் குறித்து
                     2. HSG II மற்றும் HSG I  Officiating குறித்து ..
                      3.தலமட்ட பிரச்சினைகள் 
                  அனைவரும் வருக !உங்கள் உயிரோட்டமான கருத்துக்களை தருக !
                                                     போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                                                               SK .பாட்சா 

0 comments:

Post a Comment