...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 17, 2017

                                               நவீன நரகாசுரன் 
தீபங்களின் அலங்காரமாம் 
வண்ணங்களின் ஊர்கோலமாம் 
தீபாவளி வந்துவிட்டது 
நம்மை சுற்றி 
நரகாசுரர்கள் 
யாரை முதலில் அழிப்பது -
யாரை அடுத்து அழைப்பது 

எந்த நோக்கங்கள் இல்லாமல் 
பட்டாசுக்கும் -பட்டாடைக்குள்ளும் 
நாம் இருப்பதால் 
அச்சங்கள் ஏதுமின்றி 
நரகாசுரன் இங்கே கோலோச்சுகிறான் 

அரசு ஊழியர்களுக்கு போனசோடு முடிகிறது 
அரசுக்கு ஒருநாள் விடுமுறையோடு கழிகிறது 
நம்மை வதம் செய்யும் 
நரகாசுரர்களை  நாம் மறந்ததால் 
பட்டாசு புகைகளில் மறைந்து 
பயமில்லாமல் நரகாசுரன் வருகிறான் 

இங்கே சிறுக சிறுக தொடங்கிய 
நம் கணக்குகள் மொத்தமாக 
போஸ்டல் வங்கி என்ற மாதவி 
சொந்தம்கொண்டாட தொடங்கிவிட்டாள் 
இங்கே நீதிகேட்டு என்னாகப்போகுது என்று 
கண்ணகியும்  மிச்ச  கொலுசை விற்க
கடைத்தெருவில் காத்திருக்கிறாள் 

அஞ்சல் துறைக்கென்று இருந்த 
அடையாளங்களை வங்கிகளுக்கு 
வேண்டும் என்று  -வஞ்சகத்தோடு 
கைகேகி வரமாக வாங்கி கொண்டாள் 
காட்டுக்கு வேண்டாமென்று  -நாட்டுக்குள்ளே -இனி 
வரிகட்டிவாழ முடிவெடுத்திருக்கும் தசரத செல்வங்கள்  

புதுப்புது திட்டங்களால் நம் எதிர்காலத்தை 
தொலைத்து  கொண்டிருக்கிறோம் -
துரியோதனன் சொல்லாமலே -இங்கு 
தனியார் எனும் துச்சாதனன் 
அஞ்சல் துறையின் 
துகில் உரிய  தயாராகிவிட்டான் 
இராவணன் வீழ்ச்சிக்கு பின் 
ஒரு கொண்ண்டாட்டம் -
பேயாட்சி நடத்திய நரகாசுரனை அழித்து 
பெண்களை விடுவித்த விடுதலை  விழா 
பாரதத்தில் சொன்னதைப்போல 
பாண்டவர்கள் மீண்டும் நாடு திரும்பும் விழா -என 
பல கலாச்சார காரணங்களை கொண்ட விழா 
சுருங்க சொன்னால் 
மக்களை துன்புறுத்தியவர்களிடம் இருந்து 
நாட்டை விடுவித்து நல்லாட்சிக்கு 
அடிகோல் நடும் விழா --இப்படி 
கலாச்சர கதைகள் -நமக்கு கொண்டாட்டங்களை 
மட்டுமல்ல -கொடுங்கோலர்களை 
எதிர்க்கவும் சொல்லிகொடுத்திருக்கிறது 

வாருங்கள் --முதலில் நம் 
சமூக பாதுகாப்பை சீரழித்த 
புதிய பென்ஷன் என்ற 
நவீன நரகாசுரனை வீழ்த்த 
புறப்படுவோம் --
தீபாவளி தீபங்கள் -நம் வருங்காலத்திற்கு 
வெளிச்சங்களை கொடுக்கட்டும் 
அனைவருக்கும் நெல்லை NFPE இன் 
தீபாவளி நல் வாழ்த்துக்கள் 
  வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 

1 comment: